தேர்தலுக்கு முன் அம்னோவுக்கு எச்சரிக்கை!

top-news

கோலாலம்பூர், நவ 28: அண்மைய மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதால் மட்டும் அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோவின் வெற்றி உறுதியாகிவிடாது என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அம்னோ அண்மையில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களில் அரசியல் ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையிலான தேர்தல் ஒத்துழைப்பு சில தொகுதிகளில் வெற்றிக்கு உதவியுள்ளது.

ஆனால், மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றியை தேசிய அளவிலான மக்கள் ஆதரவாகக் கருதிவிடக் கூடாது என்று Global Asia Consulting நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் அஹ்மத் ஸஹாருடின் சானி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தாலும், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத்தேர்தலில் 30 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அம்னோவின் எதிர்கால அரசியல் வளர்ச்சி, பாஸ் கட்சியுடனான உறவையும் பொறுத்தே அமையும் என்று மற்றொரு அரசியல் ஆய்வாளர் சியாஸா ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக அம்னோ தனது மக்கள் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முக்கிய எச்சரிக்கையாக உள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்