“தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்” – பகத் பாசில்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 3 –

ரசிகர்களுக்கு எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் தாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

‘பிரேமலு’ படத்தை இயக்கிய கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழில் வெளியாகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *