பிளைதுபாய் விமான சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை - ஈரான் திட்டவட்டம்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
தெஹ்ரான், அக். 5 –
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து மற்றும் கடத்தல் முயற்சி சம்பவத்துடன் ஈரானுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, பிளைதுபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் தாக்கியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உதவியுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஈரானின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், அப்போது ஈரானின் தொடர்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது. பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவத்துடன் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

