ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு?
- Surendran Sumdraraj
- 01 Aug, 2026
வாஷிங்டன், ஆக. 1-
ஈரான் மீது வார இறுதியில் புதிய ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானுக்கு எதிராக மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல்கள் சில நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அதிக அழுத்தம் செலுத்துவதன் மூலம் பேச்சுவார்த்தை மேசைக்கு அந்நாட்டை கொண்டுவர முடியும் என டிரம்ப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அமெரிக்கா தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஈரான் கடும் எதிர்வினை தெரிவித்து வருகிறது. தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



