மிரட்டலான அவதார் 3 போஸ்டர்,வெளியீட்டு தேதியுடன்!
- Muthu Kumar
- 22 Jul, 2025
அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதன் கதை பண்டோரா என்ற இடத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்ற நினைப்பதையும், அங்கு வசிக்கும் நாவி இன மக்களிடம் பேசி அவர்களை வெளியேற்ற ஹீரோ அனுப்பப்படுவதையும் பற்றியது. ஆனால், ஹீரோ அந்த மக்களில் ஒருவராக மாறி கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்துப் போராடுகிறார். இந்த கதையை ஜேம்ஸ் கேமரூன் கையாண்ட விதம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. இதுவரை பார்த்திராத ஒரு உலகத்தை அவர் கண்முன் நிறுத்தினார்.
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தண்ணீரில் கதை நடப்பது போல் காட்சிப்படுத்தியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் Avatar: Fire and Ash நெருப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், Avatar: Fire and Ash திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதார் வரிசையில் இது மூன்றாவது பாகம் ஆகும். இன்னும் இரண்டு பாகங்கள் வெளிவர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2022-ல் வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான 'Avatar: The Way of Water' மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதைத் தொடர்ந்து இப்போது வெளிவர இருக்கும் 'Fire and Ash' படத்தின் ட்ரெய்லரை திரையில் பார்க்கும் வாய்ப்பு முதன்முறையாக ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது.
எனவே, மார்வெல் மற்றும் அவதார் ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் வாய்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



