அரசியல் பிரவேசம் எப்போது? – வெளிப்படையாக பேசிய நடிகர் ரவி மோகன்
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
கள்ளக்குறிச்சி: நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவி மோகன், மணமக்களை வாழ்த்தியதுடன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
ரசிகர்களின் சில குடும்ப நிகழ்ச்சிகளில் தன்னால் இதுவரை கலந்து கொள்ள முடியாமல் போனதாகக் கூறிய அவர், இனிமேல் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார். மேலும், செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தனது வெற்றிப் படமான ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



