குடமுழுக்கு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகிறாரா நித்யானந்தா? – நிர்வாகிகள் தகவல்

top-news
FREE WEBSITE AD

புதுச்சேரி, செப். 4 –

புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் உள்ள கைலாசா நித்யானந்தா தியான பீடத்தில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தொடர்பாக தியான பீட நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, விழாவில் நித்யானந்தா நேரில் கலந்து கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அவரது வருகை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர்.

மேலும், நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தந்தால் அவருக்கு மாநில அரசு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *