கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவேன்! - இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மக்கோத்தா உறுப்பினர் உறுதி

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, அக் 3: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா இன்று கோத்தா இஸ்கண்டாரில் உள்ள சுல்தான் இஸ்மாயிலில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் சர்காஷி முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட 40 வயதான சையத் ஹுசைன், சட்டமன்ற உறுப்பினராக தனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

ஜொகூர் மாநில அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் தாம் உறுதியளிப்பதாக குளுவாங் UMNO இளைஞர் தலைவருமான அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்கோத்தா சட்டமன்ற  இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சையத் ஹுசைன், 20,648 வாக்குகள் பெரும்பான்மையுடன் மகத்தான வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *