மலாய்க்காரர்களின் நலனுக்கானது என்றால், எந்தவொரு புதிய அரசியல் கட்சியையும் ஆதரிப்பேன்! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 15 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 15: மலாய் மக்களிடையே அதிக ஒற்றுமைக்கு பங்களித்து, சமூகத்தை மேலும் பிளவுபடுத்தாத பட்சத்தில்,
மலாய்காரர்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு
புதிய அரசியல் கட்சியையும் தாம் வரவேற்பதாக பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட்
ஹமிடி தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவராகவும் இருக்கும் ஜாஹிட், தனிநபர்கள் அல்லது முக்கிய பிரமுகர்களால்
நிறுவப்படும் எந்தவொரு புதிய அரசியல் தளமும், மலாய் சிந்தனையை ஒன்றிணைப்பதையும் பொதுவான நோக்கங்களை
வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
எந்தத் தளம் பயன்படுத்தப்பட்டாலும், அது இறுதியில் தேசிய செயல்திட்டம், இஸ்லாமிய செயல்திட்டம் மற்றும் மலாய் சமூகத்தின் நலன்களுக்கு ஆதரவாக மக்களை ஒன்றிணைத்தால், அது ஆதரவுக்குத் தகுதியானது என்று நபண்டார் டத்தோ ஓன்னில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் மசூதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

