விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் ஹென்றி–ஹாரி ஜோடி சாம்பியன்

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஜூலை 14-

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்தின் ஹென்றி பேட்டன்–பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதல்நிலை ஜோடியான ஹென்றி–ஹாரி, எல் சால்வடாரின் மார்செலோ அரேவாலோ–குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடியை எதிர்கொண்டது. இரு அணிகளும் தங்களது சர்வீஸ் ஆட்டங்களைத் தொடர்ந்து தக்கவைத்ததால், இரண்டு செட்களும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றன.

முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயல்பட்ட ஹென்றி–ஹாரி ஜோடி, 7–6(4), 7–6(3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு ஜோடிகளும் எதிரணிக்கு ஒரு ‘பிரேக் பாயிண்ட்’ வாய்ப்பைக்கூட வழங்கவில்லை.

ஹென்றி பேட்டன்–ஹாரி ஹெலியோவாரா ஜோடி வெல்லும் இரண்டாவது விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பட்டம் இதுவாகும். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *