KKB – PH வெற்றி! PANG வெற்றிபெற்றதாக அம்னோ பொதுச் செயலாளர் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD


கோலகுபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 3,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளதாக  அதிகாரப்பூர்வமற்ற தகவலின் அடிப்பைடையில் அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி  தெரிவித்தார்.

கோல குபு பஹாரு இடைத்தேர்தலில் 3,000 வாக்குகளுக்கு மேல் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்காக ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் PH அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

 PH தேர்தல் செயல்பாட்டு அறையில், டிஏபி தலைவர்களும் ஆதரவாளர்களும் வெற்றி பெற்றதைக் கூறிய பிறகு "பாங் சாக் தாவோ" மற்றும் "ஒற்றுமை அரசாங்கம்" என்று ஆரவாரம் செய்தனர்.

 டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் தியோ, சிலாங்கூர் டிஏபி செயலாளர் என்ஜி ஸ்சே ஹான் மற்றும் புச்சோங் எம்பி யோ பீ யின் போன்ற மூத்த தலைவர்களும் அங்கு காணப்பட்டனர்.

 இரவு 10 மணிக்குள் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இரவு 8.07 மணி நிலவரப்படி, இதுவரை 9,391 வாக்குகளைப் பெற்ற பெரிகாடன் நேசனலின் கைருல் அஸ்ஹாரி சவுத்தை விட பாங் 12,860 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயேச்சை வேட்பாளர் Nyau Ke Xin மற்றும் பார்ட்டி ரக்யாட் மலேசியாவின் Hafizah Zainuddin முறையே 178 மற்றும் 143 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளனர்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *