ஜொகூரில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதிய உயர்வு!
- Muthu Kumar
- 22 Nov, 2024
(கோகி கருணாநிதி)
இஸ்கண்டார் புத்திரி, நவ. 22-
ஜொகூர் அரசு, ஜொகூர் மாநிலத்தின் சுமார் 17,704 அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியமாக விசேஷ நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. ஜொகூர் மந்திரி பெசார், டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி இந்த அறிவிப்பை கொடுத்து, ஜொகூர் 2025ஆம் ஆண்டு பட்ஜெட் விவரங்களை இஸ்கண்டார் கோட்டையில் உள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில், நேற்று முன்வைத்தார்.
இந்த விசேஷ நிதி உதவி, மாநில அரசால் ஊதியம் வழங்கப்படும் மத்திய அரசின் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் என்றார். இந்த ஊக்கத்தொகை ஜொகூர் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கும் திறன் மற்றும் சிறந்த செயல்திறனை மேம்படுத்தும் ஊக்கமாக இருக்குமென்றும் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *