சொகுசு கார் அணிவகுப்புக்காக போக்குவரத்தை தடை செய்த இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 16: ஜொகூர் பாருவின் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள புலத்தான் லெபு கோத்தா இஸ்கண்டார் என்ற இடத்தில், ஒரு சொகுசு கார் அணிவகுப்புக்கு வழிவிடுவதற்காகப் போக்குவரத்தைத் தடுத்து, சாலை "மார்ஷல்களாக" செயல்பட்டதாக நம்பப்படும் இரண்டு கார் ஓட்டுநர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

இஸ்கண்டார் புத்ரி துணை காவல் தலைவர் சைஃபுல்லா  யஹாயா, அந்த இரு நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

நேற்று மாலை சுமார் 6.16 மணியளவில் 'த்ரெட்ஸ்' தளத்தில் இந்தச் சம்பவம் குறித்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

புத்ரி துறைமுகத்திலிருந்து ஜோகூர் பாரு நகர மையத்தை நோக்கி அந்த சூப்பர்கார் அணிவகுப்பு பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்த அணிவகுப்பு செல்ல வழிவிடுவதற்காக அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி, அந்த இரண்டு ஓட்டுநர்களும் மார்ஷல்களாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சைஃபுல்லா கூறினார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *