PKRஇல் இணையும் இரண்டு முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 21: PKR  கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற அதன் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பைத் தொடர்ந்து, பண்டார் துன் ரசாக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமாரூதின் ஜாஃபர் மற்றும் நிபோங் தெபால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சோர் உத்மான் ஆகியோர் PKR கட்சியில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் வெளியுறவுத் துறை துணை அமைச்சரான கமாரூதின், PKR-இன் செராஸ் பிரிவில் சேர ஆர்வம் காட்டி வருவதாகவும், அவரை ஏற்றுக்கொள்வதில் கூட்டாட்சிப் பிரதேசங்களின் PKR பிரிவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அன்வாரின் அழைப்பைத் தொடர்ந்து மன்சோரும் PKR-க்குத் திரும்புவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *