டாக்சிக்' படத்திற்கு 2 இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம்!
- Muthu Kumar
- 10 Dec, 2025
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் படம் 'டாக்சிக்'.விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை தயாரிக்கும் கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. தற்போது மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
இதனிடையே இப்படத்தின் இசைப் பணிகளை இரண்டு இசையமைப்பாளர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதன் பாடல்களை அனிருத்தும், பின்னணி இசையினை ரவி பஸ்ரூரும் உருவாக்கவுள்ளனர். இருவருமே முன்னணி இசையமைப்பாளர்கள் என்பதால் இப்படத்தின் இசைக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
'டாக்சிக்' படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முதலில் கீது மோகன்தாஸ் கதை, திரைக்கதையில் உருவான இப்படம், தற்போது இதில் யஷ் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



