சுங்கைபீசி டோல் சாவடியின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

சுங்கைபீசி டோல் சாவடியின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

சிரம்பானை நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து அதிகாலை 3.42 மணிக்கு  தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

வாகனத்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக  சிலாங்கூர் தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார்  தெரிவித்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *