உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2-ஆவது சுற்று ஆட்டத்தில் கனடாவைச் சேர்ந்த வென் யூ ஜாங்கை சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் ஆட்டத்தை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நேர் செட்களில் வென்று 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

2019-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து, இந்த தொடரில் 9-ஆவது நிலை வீராங்கனையாக களமிறங்கியுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் மேலும் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அவர் விளையாடி வருகிறார்.

3-ஆவது சுற்றில் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள சீன வீராங்கனை வாங் ஷி யியை அவர் எதிர்கொள்ள உள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *