சரவாக் விபத்தில் மாணவிகள் இருவர் பலி!
- Shan Siva
- 09 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 9: இன்று காலை சரவாக்கின் சிமுன்ஜானில் உள்ள பாடாங் சடோங் பாலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியுடன் பெரோடுவா மைவி கார் மோதியதில், காரில் இருந்த இரண்டு மாணவிகள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
காலை 6.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 19 வயதான நூர்ஃபஸிலா ரம்லி மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அறிவிக்கப்பட்டதாக ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
மைவி காரை ஓட்டிச் சென்ற நூர்ஃபஸிலாவின் சகோதரர், 30 வயதான ஹருதின் ரம்லி, காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிமுன்ஜான் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள், விபத்து ஏற்படுவதற்கு முன்பு லாரி சாலையோரம் பழுதடைந்திருந்ததைக் கண்டறிந்ததாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
லாரி ஓட்டுநரான 22 வயது இளைஞர் காயமின்றி தப்பினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



