அளவுக்கு அதிகமான அதிகாரம்! வரம்பு மீறும் MACC - சரவணன் குற்றச்சாட்டு

top-news

கோலாலம்பூர், அக் 2: கடந்த திங்களன்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்தில் தனது 12 வயது மகன் இருந்ததற்கான காரணத்தை அந்த ஆணையம் நியாயப்படுத்தியதை எம். சரவணன் விமர்சித்துள்ளார்.

ஒரு சிறுவனை இந்த விவகாரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிய அவர், அந்த விளக்கத்தை முற்றிலும் தர்க்கத்திற்கு முரணானது என்று சாடினார்.

குறிப்பிடத்தக்க விசாரணை அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு, 12 வயது சிறுவன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடிப்படை விவேகத்தையும் பொது அறிவையும் பயன்படுத்தத் தவறியது மிகவும் வருந்தத்தக்கது என்று முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் கூறினார்.

குழந்தைகளை வீட்டில் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால், அவர்கள் 'வழக்கம் போல் உடன் வந்தனர்' என்று தலைமை ஆணையர் கூறியது, பொருத்தமற்றது மற்றும் அலட்சியமான ஒரு கருத்தாகும்.

அதிகாரப்பூர்வ விசாரணை நடைமுறைகளுக்காக ஒரு சிறுவனை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வரவழைத்தது நிர்வாக ரீதியாகச் செய்யப்பட்ட ஒரு தவறு; அந்தத் தவறை மறைக்கவே இத்தகைய கருத்துகள் கூறப்படுகின்றன  என்று சரவணன் கூறினார்.

முன்னதாக, சரவணனின் மகனிடம் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான அறிவிப்பாணையை (asset declaration notice) வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தபோது, ​​தாங்கள் விவேகத்துடன் செயல்பட்டதாகவும் நியாயமானதைக் கருத்தில் கொண்டதாகவும் MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் கூறியிருந்தார்.

MACC தலைமையகத்தில் அந்த 12 வயது சிறுவன் இருந்ததாலேயே, விசாரணை தொடர்பான அறிவிப்பாணையைப் பெறுவதற்காகத்தான் அவன் அங்கு வந்திருந்தான் என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.

வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததாலேயே சரவணனின் குழந்தைகள் அங்கு வந்திருக்கக்கூடும் என்று ஹலீம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், MACC ஏன் முன்னதாகவே அந்த விவேகத்தைப் பயன்படுத்தவில்லை என்று சரவணன் கேள்வி எழுப்பினார். ஒரு குழந்தையிடம் நேரில் சட்டப்பூர்வ அறிவிப்பாணையை வழங்க முற்பட்டது நியாயமான அமலாக்க வரம்பை மீறிய செயல் என்றும், அது சட்டப்பூர்வ அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

திங்களன்று தனது குடும்பத்தினருடன் தலைமையகத்திற்குச் செல்வதற்கு முன்பே அவர் MACC-யை விமர்சித்திருந்தார்; அதாவது, தனது மகனிடம் வழங்கப்படவிருந்த சொத்து விவர அறிவிப்பாணையை, அவனது பெற்றோரான தன்னிடம்  வழங்கியிருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்! 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *