சீன துறைமுகத்தில் மிகப்பெரிய கொள்கலன் கப்பலில் வெடி விபத்து!

top-news
FREE WEBSITE AD

உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகமான ஷாங்காயின் நிங்போ-ஜூஷானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பெரிய கொள்கலன் கப்பலில் பயங்கரமான வெடிப்பு ஏற்பட்டது.

வெளியாகியுள்ள காணொளிகளில் கப்பலை ஒரு பெரிய நெருப்புப் பந்து சூழ்ந்த இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தைவானைச் சேர்ந்த யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான YM மொபிலிட்டி என்ற கப்பலில் இந்த விபத்து ஏற்பட்டது.

கப்பலில் ஆபத்தான பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை.
வெடிப்பால் ஏற்பட்ட பெரிய தீ கப்பலில் வேகமாக பரவியது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.கப்பல் மற்றும் துறைமுக கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *