பெட்டாலிங் ஜெயாவில் இடைத்தேர்தலா? அப்படியெல்லாம் இல்லை! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

top-news

கோலாலம்பூர், அக் 5: பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தாது என்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி தேதியிட்ட கடிதம் மூலம் மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் இது குறித்து ஆணையத்திற்குத் தெரிவித்ததாக தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் கூறினார்.

அரசியலமைப்பின் 54(1) பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே உள்ளதால், காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று ஜொஹாரி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்ததாக அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

15வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2027-இல் தானாகவே முடிவடைகிறது, அதன் பிறகு 60 நாட்களுக்குள் 16வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

PKR கட்சியிலிருந்து மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லீ வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று முதல் PKR உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு, பெர்சாமா கட்சியில் இணைந்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *