வாலென்சியாவை 5-0 என பந்தாடிய பார்சிலோனா – லாமின் யமால் இரட்டை கோல்

top-news

பார்சிலோனா, செப். 7 –

ஸ்பெயின் லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா, வாலென்சியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.

வாலென்சியாவின் மெஸ்டல்லா அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனாவின் அபார வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அவருடன் பெர்மின் லோபஸ், ரபின்ஹா மற்றும் பெட்ரி ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஹான்சி பிளிக் தலைமையிலான பார்சிலோனா ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வாலென்சியாவுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது.

சிறிய காயம் காரணமாக முந்தைய நாள் அணியின் பயிற்சியில் பங்கேற்காத யமால், போட்டியில் களமிறங்கியபோது காயத்தின் எந்த தாக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு கோல்களைப் பதிவு செய்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *