என் மகள் எனது இளவரசி! ஷாருக்கான் போட்ட 7 கண்டிஷன்கள்!
- Muthu Kumar
- 23 May, 2024
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
ஷாருக்கானுக்கு சுஹானா என்ற மகளும், ஆர்யன் கான், அப்ராம் கான் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்களில் ஆர்யன் கான் சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் விவகாரத்தில் கைது ஆனது குறிப்பிடத்தக்கது. சுஹானா கானை பொறுத்தவரை அவருக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். பிறகு அதுதொடர்பாக வெளிநாட்டுக்கு சென்று படித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிய அவர் ஜோயா அக்தர் இயக்கிய The Archies என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் சுஹானாவுக்கு டீசண்ட்டான வரவேற்பையே பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு இன்னும் சில படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கண்டிப்பாக தந்தை போலவே பெரிய ஸ்டாராக சுஹானா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது மகளை யாராவது டேட் செய்தால் அவர்களுக்கு 7 ரூல்ஸ் இருக்கிறது என்று ஷாருக் பேசிய காணொளி ஒன்று தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் ஷாருக்கான்,
1."எனது மகளை காதலித்தாலோ அல்லது டேட் செய்தாலோ அந்த நபருக்கு முதலில் வேலை இருக்க வேண்டும்.
2. அந்த நபரை எனக்கு பிடிக்காது.
3. நான் எல்லா இடத்திலும் இருப்பேன்.
4. சஹானா எனது இளவரசி.
5. அவளுக்கு அவன் என்ன செய்தாலும் அதனை நான் திருப்பி செய்வேன்.
6. எனவே அவன் வழக்கறிஞர் வைத்துக்கொள்வது நல்லது.
7. நான் சிறைக்கு செல்ல தயங்கமாட்டேன்"" என்று குறிப்பிட்டிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *