கவலைக்கிடம் - PKR நிறுவன உறுப்பினர் சையத் ஹுசின் அலி !

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26: பிகேஆரின் நிறுவன உறுப்பினரான சையத் ஹுசின் அலியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு குறுஞ்செய்தியில், அவரது மகன் அலி சையத் ஹுசைன், அவரது தந்தை தற்போது சுயநினைவின்றி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தயவு செய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

87 வயதான சையத் ஹுசின் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தலைவராக இருந்த பார்ட்டி ராக்யாட் மலேசியா மற்றும் 2003 இல் பார்ட்டி கெடிலன் நேசனல் இணைந்ததைத் தொடர்ந்து பிகேஆர் துணைத் தலைவராக ஆனார்.

1974 டிசம்பரில், மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக இருந்த சையத் ஹுசின், பாலிங்கில் விவசாயிகள் மற்றும் கோலாலம்பூரில் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, இப்போது ரத்து செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *