இது என்னுடைய தொகுதி! இங்கே கோயிலை உடைக்காதீர்! டி.ஏ.பி நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 21 Aug, 2026
ஆகஸ்ட் 21,
பகாங் புக்கிட் திங்கியில் உள்ள கோயில் சிலைகள் அடையாளம் காணப்படாத ஒரு சிலரால் சேதப்படுத்தப்பட்டதைப் பெந்தோங் நாடாளுமன்ற உறுதிப்பினர் YOUNG SYEFURA OTHMAN கண்டனம் தெரிவித்துள்ளார். இது என்னுடைய தொகுதி, இங்கே எந்த கோயிலும் உடைப்பட கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதை மீறியும் ஒரு சில தரப்பினர்களால் சமய அடையாளங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, என்னுடைய தொகுதியில் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடாதீர், அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் என பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான Young Syefura Othman எச்சரிக்கை வித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பெந்தோங் மாவட்டக் காவல் நிலையத்தில் முறையாகப் புகார் அளிக்கப்பட்டிருப்பதை Young Syefura Othman சுட்டிக்காட்டினார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகDஸ்ட் 16 அதிகாலை 1.51 மணிக்கு BUKIT TINGGI பிரம்ம ரிஷி மலை கோயிலில் உள்ள கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதாக முதல் புகாரைப் பெற்றதாகவும் அதனை அடுத்து பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இது குறித்து புகார் அளித்திருப்பதாகவும் பெந்தோங் காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



