நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் என்னை குறை சொல்கிறவர்கள், முன்னாள் தலைவர்களின் ஊழலில் வாயை மூடியது ஏன்? - அன்வார்

top-news
FREE WEBSITE AD

1 எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொண்டதற்காக தன்னைப் பலர் விமர்சனம் செய்வதாக அன்வார் வருத்தம் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் ஊழலை பற்றி பேசும் போது பேசாதவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் கேள்விக்குறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்பை மட்டும் ஒரே பிரச்சினையாக வைக்கும்போது அது முற்றிலும் பாசாங்குத்தனமானது என்று தாம் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான சக்திகளாக இருக்க வேண்டியவர்கள் அதில் பாரபட்சம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
பில்லியன் கணக்கில் ரிங்கிட் வசூலித்த பிற முன்னாள் தலைவர்களின் பெரிய ஊழல் தொடர்பில் வரும் விவகாரங்களில் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது நஜிப் விவகாரத்தை சர்ச்சையாக்குவது வேடிக்கையாக இருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *