1BestariNet திட்டத்தின் RM 4 Billion நிதி முறைகேடு! SPRM பதில் சொல்லும்! – துணைக் கல்வி அமைச்சர்
- Sangeetha K Loganathan
- 11 Nov, 2024
நவம்பர் 11,
YTL Communications சம்மந்தப்பட்ட 1BestariNet விசாரணைகளில் கல்வி அமைச்சு தலையிடுவதில்லை என துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். RM4 பில்லியன் மதிப்பிலானக் குத்தகையும் அதன் செயல்பாடுகளையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரித்து வருவதாகவும் அது தொடர்பான விசாரணைகளுக்குக் கல்வி அமைச்சு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிகளின் மேம்பாடுகள் தொடர்பான நிதிய்யில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM உறுதி செய்ய வேண்டுமே தவிர நானோ அமைச்சரோ அல்ல என Wong Kah Woh தெரிவித்தார்.
1BestariNet திட்டத்தின் 4 பில்லியன் ரிங்கிட் குறித்து கேள்விகள் இருந்தால் அதனை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் பெறலாம் என்றும், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் முழுமையான விசாரணை அறிக்கையை வெளியிடாத வரையில் தனக்கும் விசாரணை குறித்து எதுவும் தெரியாது என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
KPM serahkan kepada SPRM untuk siasat isu tuntutan bayaran tender 1BestariNet RM4 bilion yang dianugerahkan kepada YTL pada 2011. KPM sedia beri kerjasama dan memuktamadkan cadangan penyelesaian isu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *