உக்ரைன் – அமெரிக்கா – ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு!

top-news

ஒஸ்லோ: ரஷியா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், உக்ரைன், அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். 

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு உக்ரைன் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வரும் தூதரக முயற்சிகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *