ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
ஹராரே, ஆக. 13-
ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அண்டை நாடான ஜாம்பியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 200 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்ட இந்த ஏரியில் படகு பயணிகளை ஏற்றிச் சென்றபோது விபத்தில் சிக்கியது.
முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 27 பேர் காணாமல் போயிருந்தனர். பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
விபத்துக்குள்ளான படகு 90 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் சுமார் 120 பேர் வரை பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



