PH - PN மோதல்! பக்காத்தான் வெற்றி! சுங்கை பக்காப்பில் உற்சாகமூட்டிய கால்பந்து போட்டி!
- Shan Siva
- 01 Jul, 2024
நிபோங் தெபால், ஜூலை.1: சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் நீர் மாற்றத்துறை துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கால்பந்து அணி நட்புரீதியான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கெடா முதல்வர் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முகமட் நோர் தலைமையிலான பெரிகாத்தான் நேஷனல் டாப் லெவன் அணிக்கு எதிராக இந்த வெற்றியை பக்காத்தான் ஹராப்பான் அணி பெற்றது.
இங்குள்ள சிம்பாங் அம்பாட்டில் உள்ள தாமன் பெகாட்ரா மைதானத்தில் நடந்த இந்த ஒரு மணி நேரப் போட்டி இரு தரப்பிலிருந்தும் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான இளைஞர் தலைவர்களை ஒன்று திரட்டியது.
பிகேஆர் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், சிலாங்கூர் PH தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் மற்றும் இடைத்தேர்தலுக்கான PH வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்மல் நஸ்ருல்லா, நாட்டின் அரசியல் பிரச்சாரங்கள் மேலும் முதிர்ச்சியடைந்து, ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரவாதத்தின் கூறுகளைக் குறைப்பதன் மூலம் நிகழ்ச்சியின் வெற்றி சாதகமான அறிகுறியாகும் என்றார்.
தேர்தலில், நாங்கள் வெவ்வேறு அணிகளில் இருந்து வரலாம். ஆனால் உண்மையில், நாங்கள் ஒன்றாகப் பந்தை விளையாடுகிறோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், முஹம்மது சனுசி இந்தப் போட்டியை எதிர்காலத்தில் அதிக ஒத்துழைப்பின் தொடக்கமாக விவரித்தார், இது பிரச்சார சூட்டினைத் தணிக்க உதவியது என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *