அற்ப விஷயங்களில் சண்டையிடுவதை நிறுத்துங்கள்! - அன்வார்
.jpeg)
- Shan Siva
- 23 Feb, 2025
புத்ராஜெயா, பிப் 23: அற்ப விஷயங்களில் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, மற்ற நாடுகள் முன்னேறி வருவதால், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் நாட்டின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மலேசியர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் ஆற்றல் மாற்றத்தில் கவனம் செலுத்துவதாகவும், புதுப்பிக்க முடியாத வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும் அன்வார் கூறினார்.
இன்னும் நாம் ரகளை செய்கிறோம் மற்றும் அற்ப விஷயங்களில் சண்டையிடுகிறோம் என்று குறிப்பிட்ட அவர், சரியான விஷயங்களில் கவனம் செலுத்துவது தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் துறைகள் உட்பட அனைவரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
இன்று அலமண்டா ஷாப்பிங் சென்டரில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு தனி விஷயத்தில், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தனிப்பட்ட பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக நல்லாட்சியை உறுதிப்படுத்தும் முயற்சி என்று அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தங்கள் கடமைகளைச் செய்ய பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விசாரணைகளில் தாம் தலையிடவில்லை என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *