Turun Anwar பேரணியில் சலசலப்பு! மேடை நாற்காலிகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 26,

பிரதமர் Datuk Seri Anwar ibrahimக்கு எதிராக நடத்தப்படும் Turun Anwar எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவளிக்கும் வகையில் பெரும்பாலானோர்  தலைநகரில் குவிந்தனர். பேரணியின் பிரச்சாரத்திற்காக மெர்டேக்கா சதுக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினர் அப்புறப்படுத்திய போது பேரணியில் பங்கேற்றவர்களுக்கும் DBKL அதிகாரிகளுக்கும் இடையில் சலசலப்பு மூண்டது. காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காவல்துறையின் அனுமதி அறிக்கையில் பேரணிக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சுதந்திரமாகப் பேரணியை நடத்தலாம் என பாஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். ஆனால் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மேடைகள் அமைக்கப்படுவது குறித்து எந்தவொரு முன் அறிவிப்பும் செய்யவில்லை என்பதால் மெர்டேக்கா சதுக்கத்திலிருந்த மேடையையும் 100க்கும் மேற்பட்ட நாற்காலியையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. 

முன்னதாகப் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய அனுமதிக் கோரிக்கை கடிதத்தில் பேரணிக்காகப் பயன்படுத்தப்படும் பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கும் சாலைகளில் அணிவகுத்து செல்வதற்கான கோரிக்கைகள் மட்டுமே இருந்ததாகவும் மேடைகள் அமைக்கவும் பொது இடங்களில் தற்காலிகக் கட்டுமானங்களை அமைக்கவும் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என்பதைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உறுதிப்படுத்தியது. ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்த கோரிக்கைகளை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் DBKL அங்கீகரித்திருப்பதாகவும் கோரிக்கையில் இல்லாத காரியங்களைப் பேரணியில் பங்கேற்றவர்கள் முன்னெடுக்க வேண்டாம் என்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *