நாட்டிற்குள் கடத்தப்பட்ட RM 690,00 மதிப்புள்ள கஞ்சா பூக்கள் பறிமுதல்!

- Shan Siva
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22: மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியான பாடாங்
பெசாரில் நேற்று அதிகாலை நாட்டிற்கு கடத்தப்பட்டதாக நம்பப்படும் 23 கிலோ கஞ்சாப் பூக்களை பொதுச் செயல்பாட்டுப்
படையான GOF பறிமுதல்
செய்தது.
சிசிடிவி
காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், சுமார் RM690,000 மதிப்புள்ள இந்த கஞ்சாப் பூக்களின் பறிமுதல் நடவடிக்கை
ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக GOF
வடக்கு படைப்பிரிவு தளபதி ஷாஹ்ரம் ஹாஷிம்
தெரிவித்தார்.
பாடாங் பெசார்
காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் அவை
ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப்பொருள்
கடத்தலுக்கான 1952 ஆம் ஆண்டு
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
பாடாங் பெசாரைச்
சுற்றி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை GOF 18-வது பட்டாலியனின்
புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டு வருவதாக ஷாஹ்ரம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *