அமெரிக்காவுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – மகாதீர்

- Shan Siva
- 05 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 5: டொனால்ட் டிரம்ப் தனது உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் கையாளும் போது மலேசியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உத்தரவிட்டது அமெரிக்க ராஜதந்திர
வரலாற்றில் முதல் முறையாகும் என்று தமது X இடுகையில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்க ராஜதந்திரத்தின் மோசமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது என்று
அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அமெரிக்காவுடனான நம்து நாட்டின்
உறவுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப், அவரது துணைத் தலைவர்
ஜே.டி. வான்ஸுடன் சேர்ந்து கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் ஜெலென்ஸ்கியை கடுமையாக
சாடினார்.
வான்ஸ் ஜெலென்ஸ்கியை அமெரிக்காவிற்கு "அவமரியாதை" செய்ததாக குற்றம்
சாட்டினார். அமெரிக்கா வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்காததற்காகவும் அவர் அவரைக்
கேலி செய்தார்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமெரிக்காவுடனான மலேசியாவின் இராஜதந்திர உறவுகள் வலுவாக இருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது!
Tun Dr. Mahathir Mohamad menegaskan Malaysia harus berhati-hati dalam hubungan dengan AS selepas Donald Trump mengarahkan Presiden Ukraine Volodymyr Zelenskyy keluar dari White House. Beliau mengkritik diplomasi AS, sementara Trump dan timbalannya, J.D. Vance, mengutuk Zelenskyy secara terbuka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *