இஸ்மாயில் சப்ரி ஊழல் பண விவகாரம்.... அரசின் விண்ணப்பத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

- Shan Siva
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் விண்ணப்பத்தை அக்டோபர் 1 ஆம் தேதி விசாரிக்க இங்குள்ள அமர்வு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இஸ்மாயில்
மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் அனுவார் யூனுஸ் ஆகியோரைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், பறிமுதல்
விண்ணப்பத்திற்கு பதிலளிக்க உள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி சுசானா ஹுசின் இன்று வழக்கு நிர்வாகத்தின் போது தேதியை நிர்ணயித்தார்.
பதில் தாக்கல்
செய்ய மூன்று வாரங்கள் தேவை என்று வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷாத் நீதிமன்றத்தில்
தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் தங்கள் பிரமாணப் பத்திரங்களை
சமர்ப்பிக்கவும், செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் அரசு
தரப்பு பதிலளிக்கவும் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *