பள்ளியின் அலட்சியத்தால் 17 வயது மாணவி மரணம்! பெற்றோர்கள் குற்றச்சாட்டு! – கிள்ளான்

top-news
FREE WEBSITE AD

ஜுலை 17,

கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 17 வயது எஸ்.பி.எம் மாணவி உயிரிழந்த வழக்கில் இடைநிலைப்பள்ளியின் நிர்வாகத்தின் மீது ஆசிரியர்கள் மீதும் உயிரிழந்த மாணவியுடன் இருந்த தோழிகள் என 9 பேர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் கிள்ளானில் உள்ள இடைநிலைப்பள்ளியில் கடந்த மே 27 நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதுவரையில் தங்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெற்றோர்களான 47 வயது கோபாலனும் 45 வயது மகேஸ்வரியும் நேற்றைய ஊடகச் சந்திப்பில் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது தனது மகளின் வகுப்புத் தோழி தன் மகள் வயிற்று வலியால் துடிப்பதாகத் தகவல் தெரிவித்ததாகவும் பள்ளிக்கு விரைந்த போது தன் மகள் விஷம் அருந்தியிருப்பதாகக் கண்டறிந்ததாகவும் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவியின் தாயார் மகேஸ்வரி தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பள்ளியின் அருகிலேயே கிளினிக் இருப்பதாகவும் 10 நிமிடத் தூரத்தில் Tengku Ampuan Rahimah அரசு மருத்துவமனை இருப்பதாகவும் ஆனால் பள்ளிக்கூடம் ஆம்பூலன்ஸ் வரும் வரையில் தன் மகளையும் தன்னையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தடுத்ததாகவும் உயிரிழந்த 17 வயது மாணவியின் தந்தை கோபாலன் குற்றம்சாட்டினார்.

பள்ளியின் அலட்சியத்தால் தன்னுடைய மகள் தாமதமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சுட்டிக்காட்டினர். மயங்கிய நிலையில் வாயில் நுரையுடன் இருந்த தனது 17 வயது மகளை நாங்களே மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருப்போம். ஆனால் பள்ளியின் முதல்வரும் மற்ற ஆசிரியர்களும் பள்ளியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட வேண்டாம் என்றும் காவல்துறையினர் வந்தால் அது பள்ளிக்கு அவமானம் என்றும் ஆம்பூலன்ஸ் வரும் வரையில் காத்திருக்கும்படியும் எங்களை வலுக்கட்டாயப்படுத்தியதாக உயிரிழந்த 17 வயது மாணவியின் பெற்றோர்களான 47 வயது கோபாலனும் 45 வயது மகேஸ்வரியும் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தனர்.

பள்ளியின் இடைவேளை நேரத்தின் போது தன் சக மாணவத் தோழிகளுடன் அம்மாணவி விஷம் குடித்ததாகவும் சிறிது நேரத்தில் அம்மாணவி வாயில் நுரையுடன் சரிந்ததாகவும், அதன் பின்னர் வகுப்பிலிருந்த மற்ற மாணவிகளில் ஒருவர் மாணிவியின் தாயாரான மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

உயிரிழந்த 17 வயது மாணவியின் பெற்றோர்கள் இடைநிலைப்பள்ளியின் 6 ஆசிரியர்கள் ஊழியர்கள் மீதும் சம்பவத்தின் போது அம்மாணவியுடன் இருந்த 3 மாணவிகளுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *