கோயிலில் பாலியல் சீண்டல்! லிஷாலினிக்கு நீதி வேண்டும்! – MRS GLOBAL நதியா வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 13,

செப்பாங்கிலுள்ள கோயிலில் இளம்பெண் பாலியல் துன்புறத்தலை எதிர்கொண்டிருப்பது மனவலியை ஏற்படுத்தினாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என மிஸ் குளோபல் மலேசிய அழகி பட்டம் வென்ற நதியா உதயகுமார் வலியுறுத்தினார். இது பாலியல் சீண்டல் என்பதைக் காட்டிலும் இது ஒரு சமூகத்தின் நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது என்றும் புனிதமான வழிபாட்டுத் தலத்தில் இது மாதிரியான சம்பவம் நிகழ்ந்திருப்பது வேலியே பயிரை மேய்வதைப் போல உள்ளது என நதியா குறிப்பிட்டார்.

இந்த இழிவானவர்களைக் காப்பாற்ற நினைக்கும் எந்தவொரு தரப்பையும் எதிர்த்து நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றும், இன மதங்களின் போர்வையில் மறைந்திருக்கும் இது மாதிரியான பாலியல் காமுகர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டுமென நதியா வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஆனால் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம், எங்கள் குரல் அவருக்காக ஒலிக்கும், அவர் தனியாக இல்லை என நதியா தெரிவித்தார்.

நாம் மிகவும் மதிக்கும், நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என எண்ணும் ஒரு தலத்தில் நிகழ்ந்திருப்பதால் இனி எந்த நம்பிக்கையில் பெண்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம் என நதியா வேதனையுடன் கேள்வியை முன் வைத்தார். சம்மந்தப்பட்ட அர்ச்சகர் மீண்டும் அவரது தாய்நாட்டிற்குத் திரும்பி விட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கும் நிலையில் அவரின் அடையாளத்தைக் கோயில் நிர்வாகம் வெளியிட வேண்டும் என நதியா வலியுறுத்தினார். கோயில் நிர்வாகத்திற்குத் தெரியாமல் அந்த அர்ச்சகர் கோயிலில் வழிபாடு நடத்த முடியாது. அந்த அர்ச்சகரைக் கோயில் நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என நதியா வலியுறுத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் சமூகவலைத்தலங்களில் பகிர்ந்த புகைப்படங்கள் ஆபாசமாக இருப்பதாகச் சிலர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஒரு மாடல் அழகியின் ஆடை குறித்து கருத்து பேசும் இது மாதிரியான பிறவிகளுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை புரியாது. ஒருவரின் உடை என்பது அவரின் விருப்பம். அவர் கோயிலுக்கு அப்படியான உடையில் சென்றாரா? உடை மட்டுமே இந்த சம்பவத்திற்குக் காரணம் என பாதிக்கப்பட்ட லிஷாலினிக்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருவதை நதியா கருமையாகச் சாடினார்.

உண்மையில் இறைமைக்கும் இறை வழிபாட்டுக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை. நம்பிக்கையுடன் இருங்கள்.. லிஷாலினி தனியாக இல்லை. அவருடன் அவருக்காக நாங்கள் இருக்கிறோம் என தொழிலமுனைவோரும்  மிஸ் குளோபல் மலேசிய அழகி பட்டம் வென்ற நதியா உதயகுமார் நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *