செப்பாங் கோயிலில் பாலியல் துன்புறுத்தல்! அர்ச்சகர் மீது மலேசிய நடிகை புகார்!

- Thina S
- 11 Jul, 2025
ஜூலை 11,
சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதாகத் தெரிவித்த அர்ச்சகர் தம்மிடம் அத்துமீறியதாகவும் தகாத முறையில் தம்மைத் தொட்டதாகவும் மலேசிய நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செப்பாங்கில் உள்ள சாலாக் திங்கி மாரியம்மன் ஆலயத்தில் (MARIAMMAN TEMPLE SALAK TINGGI, SEPANG) கடந்த ஜூன் மாதம் வழிபாடு முடிந்ததும் அர்ச்சகர் தமக்குத் தீர்த்தம் அளித்ததாகவும் அதன் பின்னர் மேலதிக சிறப்பு வழிபாடுகள் குறித்து தம்மிடம் விளக்கமளிக்கவிருப்பதால் கோயில் அலுவலக அறையில் காத்திருக்கும்படி தெரிவித்ததாகப் பாதிக்கப்பட்ட மலேசிய நடிகை Lishalliny Kanaran தெரிவித்தார்.
எப்போதும் தனது தாயாருடன் அந்த கோயிலுக்குச் செல்லும்
தாம் அன்றைய நாள் தன் தாயார் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் தனியாகக்
கோயிலுக்குச் சென்றதாகவும் கோயிலின் அலுவலகத்தில் காத்திருந்த தம்மிடம் அர்ச்சகர்
வாசனை மிகுந்த திரவத்தைத் தெளித்ததாகவும் தன் தலையை இறுக்கிப் பிடித்து எல்லை மீறி
நடந்து கொண்டதாகவும் உடல் பாகங்களைத் தொட்டு ஆடைகளைக் கலைத்தாகவும் பாதிக்கப்பட்ட
நடிகை தெரிவித்தார்.
அச்சம்பவத்தின் போது உடனடியாகச் சம்பவ இடத்தை விட்டு
வெளியேறி தன்னுடைய வீட்டுக்கு வந்த பின்னரே தாம் முழுமையான சுயநினைவுக்குத்
திரும்பியதாக Lishalliny Kanaran தனது
படவரியில் (INSTAGRAM) பகிர்ந்துள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்த 21 ஜூன் போது தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நிலையில்
மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இது குறித்து வெளியே யாரிடம்? எப்படி சொல்வது? மிகுந்த மனவலியுடன் இது குறித்து தம்மால் எந்தவொரு முடிவும் எடுக்க
முடியாமல் தொடர்ந்து தனிமையில் கதறி அழுதததாகவும் பலவீனத்தின் உச்சத்தில் தாம்
இருந்ததாகவும் அவர் சமூக வலைத்தலத்தில் பகிர்ந்துள்ளார். இறுதியாக ஜூலை 4 தனது
தாயார் இந்தியாவவிலிருந்து திரும்பியதும் அவரின் ஆதரவுடன் தனது குடும்பத்தினரும்
(தந்தை, இரு சகோதரர்கள்) செப்பாங் காவல் நிலையத்தில்
புகார் அளித்ததுடன் சம்மந்தப்பட்ட கோயிலுக்கும் விரைந்து கோயிலின் நிர்வாகத்திடம்
இது குறித்து விவரித்ததாகவும் பாதிக்கப்பட்ட Lishalliny Kanaran தெரிவித்தார்.
ஆனால் கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து எந்தவொரு
மேலதிக விளக்கமும் அளிக்காமல் தட்டிக் கழித்ததாகவும் அந்த அர்ச்சகர் குறித்து
எந்தவொரு தகவலும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட
கோயில் நிர்வாகம் கோயில் பெயரை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்றும் இதனால் கோயிலுக்குப்
பாதிப்பு ஏற்படும் என வலியுறுத்தி சம்மந்தப்பட்ட அர்ச்சகரைப் பற்றிய எந்தவொரு
தகவலும் தங்களுக்குத் தெரியாது என்றும் மேலும் எங்களுடன் கோயில் நிர்வாகத் தலைவர்
பேசவும் தயாராக இல்லாமல் நழுவும்படியாகச் செயல்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட Lishalliny Kanaran விவரித்துள்ளார்.
இதை நான் தாமதமாக வெளியிடுவது என் தவறு என பலரும்
கருதலாம், ஆனால் இச்சம்பவம்
நிகழ்ந்த நாள் முதல் இதை வெளியிடும் வரையிலும் இந்த நொடி வரையும் நான் கண்ணீர்
வடிக்காத வினாடிகளே இல்லை. மன உறுதியுடன் இத்தனை நாள்களை நான் கடந்து வந்தேன், ஆனால் உடல் அளவைக் காட்டிலும் மனதளவில் நான் முழுமையாக
நொறுங்கியிருக்கிறேன். இந்த சம்பவத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத நிலையில்
நான் இதை எப்படி யாரிடம் வெளியிடுவது என திகைத்து நின்ற வேளையில் எனக்கு ஒரே
ஆதரவும் நம்பிக்கையுமாக இருந்த என் குடும்பம் என் அருகில் வரும் வரையில் மன
வலியுடன் கண்ணீருடன் நான் காத்திருந்தேன். அரை மன உறுதியுடன் என் குடும்பத்தோடு
காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்!
நான் மீண்டு விட்டேனா? இல்லை!
இன்னமும் அதிர்ச்சியில் இருக்கேனா? ஆமாம்!
வெட்கப்படுகிறேனா? இந்த நொடி
வரையிலும் ஆமாம்!
தூங்கும் போதும் அழுகிறேனா? ஒவ்வொரு
நாள் தூக்கத்திலும் கண்ணீர் வடிக்கிறேன்!
என் மன உறுதியை இழந்தேனா? முழுமையாக
இழந்து தவிக்கிறேன்!
- Lishalliny Kanaran (Miss Grand Malaysia 2021)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *