மலேசியாவில் வேலையற்றோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது! - மலேசியா புள்ளியியல் துறை தகவல்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 10: புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்தில் 525,900 ஆக இருந்த வேலையற்றோரின் எண்ணிக்கை மே மாதத்தில் 0.7% குறைந்து 522,400 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏப்ரல் மாதத்தில் இருந்ததைப் போலவே மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 3% ஆகவே இருந்ததாகத் துறை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் மொத்த வேலையாள்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, ஏப்ரல் மாதத்தில் 16.82 மில்லியனில் இருந்து 0.3% அதிகரித்து 16.86 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தலைமை புள்ளிவிவர நிபுணர் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

மலேசியாவின் நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் பொருளாதார செயல்திறனை இது பிரதிபலிக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சேவைகள் துறையில் வேலையாள்களின் எண்ணிக்கை, குறிப்பாக தங்குமிடம், உணவு மற்றும் பான சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளில் நிலையான மேல்நோக்கிய போக்கைக் காட்டியதாக உசிர் கூறினார்.

உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், சுரங்கம் மற்றும் குவாரி துறைகளும் இந்த மாதத்தில் வேலையாள்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.

15 முதல் 24 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 10.2% ஆகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 298,300 ஆக இளைஞர்களின் வேலையின்மை விகிதம் இருந்த நிலையிக்ல், மே மாதத்தில் அது 297,700 ஆகக் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டா.

அரசாங்கக் கொள்கைகள், பெரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மனித மூலதனத்தில் முதலீடுகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் நாட்டின் தொழிலாளர் சந்தை, வரும் மாதங்களில் தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உசிர் கூறினார்!

Kadar pengangguran Malaysia menurun 0.7% pada Mei 2025 kepada 522,400 orang. Jumlah pekerja meningkat kepada 16.86 juta, mencerminkan ekonomi yang kukuh. Pengangguran belia menurun kepada 10.2%. Sektor perkhidmatan, pembuatan dan pembinaan menunjukkan peningkatan pekerjaan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *