துன் டைம்மின் RM 3,000 மில்லியன் சொத்துகள் முடக்கம்! 22 குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 11,

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கும் நிலையில் அவரின் 22 குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் உட்பட சுமார் RM 3,000 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முடக்கியுள்ளது. துன் டைம்மின் மனைவி Naimah Khalid உட்பட அவரின் சொத்துகளுடன் நேரடி தொடர்பில் உள்ள மற்ற கிளை நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்கியிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது. தற்போது முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளில் பெரும்பானவை மலேசியாவுக்கு வெளியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வின் அடிப்படையில் 11 நாடுகளில் அந்த சொத்துகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 11 நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் சம்மந்தப்பட்ட சொத்துகளை முடக்கவும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tun Daim Zainuddin மீதான சொத்துக்குவிப்பு வழக்குடன் தொடர்புடைய RM 3,000 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை முடக்க இதுவரையில் United Kingdom, Amerika, Switzerland, Singapura, British Virgin Islands, Cayman, Jersey, Itali, Jepun, Indonesia ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அடுத்த கட்டமாக இந்த RM 3,000 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வந்த Tun Daim Zainuddin குடும்ப உறவினர்கள் 22 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *