தொழில்துறையில் மலேசியா ஆதிக்கம்; அதனால் சிலருக்குக் கவலை! – தெங்கு ஜஃப்ருல்

- Shan Siva
- 15 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 15: உயர் செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகள் மலேசியாவிற்குள் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MITI) கண்டுபிடிக்கவில்லை என்று அதன் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
கூற்றுக்களை
சரிபார்க்க, தொழில்துறை
பங்குதாரர்களுடன் சேர்ந்து, காவல்துறை,
சுங்கத் துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு
மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) உள்ளிட்ட அமலாக்க
நிறுவனங்களுடன் MITI ஒருங்கிணைந்து
செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதுவரை, தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தங்களுடன்
ஒத்துழைத்து பணியாற்ற அமெரிக்கா மற்றும் பெரிய நிறுவனங்களுடன் நாங்கள்
பேசியுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், ஏதேனும் ஆதாரம்
இருந்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின்
விரிவடைந்து வரும் தரவு மையத் துறை AI சில்லுகளுக்கான குறிப்பிடத்தக்க தேவையை ஏற்படுத்தியுள்ளது, இது சர்வதேச பார்வையாளர்களிடையே கவலைகளை
எழுப்புகிறது என்று தெங்கு ஜஃப்ருல் குறிப்பிட்டார்.
தொழில்துறையில்
மலேசியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் இது சில எச்சரிக்கைகளை
எழுப்பியுள்ளது என்று தாம் நினைப்பதாக அவர் மேலும் கூறினார்.
முன்னதாக அமெரிக்க
தயாரிப்பினாலான ஏஐ சில்லுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவதாக
செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *