என் மகனை நான்தான் கொலை செய்தேன் என அதிகாரிகள் வற்புறுத்தினர்! - ஜெய்ன் ரயான் தாயார் குற்றச்சாட்டு

- Shan Siva
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரயான் கடந்த ஆண்டு மரணமடைந்த நிலையில், அச்சிறுவனின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனது
மகனைத் தாம்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும்படி, தம்மை போலீசார் கட்டாயப்படுத்தியதாக ஜெய்ன் ரயான் அப்துல்
மதீனின் தாயார் இன்று அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
30 வயதான இஸ்மானிரா அப்துல் மனாஃப், தடுப்புக்காவல் உத்தரவுக்காக ஒரு மாஜிஸ்திரேட் முன் கொண்டுவரப்பட்டபோது
குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார்.
13 நாள் தடுப்புக்காவல் காலத்தில், தாம் முழு ஒத்துழைப்பு அளித்த போதிலும், தனது பதில்களில் போலீசார்
அதிருப்தி அடைந்ததாகவும் அவர் கூறினார்.
நான் என் மகனைக்
கண்டுபிடித்து, பின்னர் அவரைக் கொன்றதாக அவர்கள் ஒரு கதையை
உருவாக்கினர். நான் அதை மறுத்தேன்,
ஆனால் அவர்கள் திருப்தி
அடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும்
இஸ்மானிரா கூறினார்.
இஸ்மானிரா நேற்று
தனது வாதத்தை முன்வைக்க உத்தரவிடப்பட்டார். அதே நேரத்தில் அவரது கணவர் ஜைம் இக்வான் ஜஹாரி
அதே குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *