ஜேஎன்.1 கோவிட்-19 கிருமித் தொற்று அதிகரிப்பு இதுவரை மரணம் நிகழவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 13-

ஜேஎன்.1 கோவிட்-19 எனும் உருமாற்றக் கிருமிகளால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், இது குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 6,523 பேர் அக்கிருமிகளால் பீடிக்கப்பட்டிருந்தனர். சராசரியாக பார்க்கும்போது நாளொன்றுக்கு 228 புதிய தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

அண்மைய காலமாக கோவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்த போதிலும், வாராந்திர சராசரி தொற்று எண்ணிக்கை தேசிய எச்சரிக்கை அளவைவிட குறைவாகவே உள்ளன. அது தவிர, இதுவரை எவரும் மரணமடைந்ததாக தகவல்
கிடைக்கப் பெறவில்லை என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய கிருமிகளின் பரவலினால், இதுவரை எவரும் மரணமடையவில்லை என்றாலும், மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், முன்கள மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் கூடுதல் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொற்று அபாயத்தைக் குறைப்பதற்கு அவர்கள் இதனைச் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

எல்லா மாநிலங்களிலும் உள்ள குறிப்பிட்ட சில அரசாங்க கிளினிக்குகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். மைசெஜாத்திரா செயலி வாயிலாக அவர்கள் இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளுக்குச் செல்லும்போது அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

Kes jangkitan COVID-19 varian JN.1 meningkat dengan purata 228 kes harian pada Mei, namun tiada kematian dilaporkan. Kementerian Kesihatan menasihatkan kumpulan berisiko tinggi untuk mengambil dos penggalak dan memakai pelitup muka di kawasan sesak.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *