விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தலா 1000 வெள்ளி!

- Shan Siva
- 10 Jun, 2025
புத்ரஜெயா, ஜூன் 10: பேராக்கில் உள்ள இரண்டு மருத்துவமனைகளின் தீவிர
சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு உடனடி உதவியாக மகளிர் குடும்பம்
மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சு தலா ரிம1,000 வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மாணவர்கள்
தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் இரண்டு பேர் ஈப்போவின் ராஜா பெர்மைசுரி
பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மகளிர் குடும்பம்
மற்றும் சமூக நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறினார். இன்று மகளிர்
கருத்தரங்கை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவது குறித்தும் அமைச்ச்சு ஆராயும்
என்று நான்சி கூறினார்.
மேலும், தொழில்முறை ஆலோசகர்களின் சேவைகளை வழங்கவும் அமைச்சு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
Kementerian Pembangunan Wanita, Keluarga dan Masyarakat akan memberi bantuan segera RM1,000 kepada 10 pelajar UPSI yang dirawat di ICU. Menteri Nancy Shukri turut menyatakan kesediaan membantu keluarga mangsa termasuk sokongan kaunseling profesional.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *