RM 1.2 மில்லியன் மதிப்புள்ள பாலியல் பொம்மைகள் & தடைசெய்யப்பட்ட பொருள்கள்... போலீஸ் கைப்பற்றியது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3: ஜூன் 1 முதல் மலேசியா முழுவதும் 1,759 வளாகங்களை உள்ளடக்கிய இரண்டு வார நடவடிக்கையின் வாயிலாக, உள்துறை அமைச்சு, சுமார் RM 1.2 மில்லியன் மதிப்புள்ள பாலியல் பொம்மைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கைப்பற்றியது.

540,000 ரிங்கிட் மதிப்புள்ள 15,602 பாலியல் பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு செயலாளர் நிக் யுசைமி யூசோப் தெரிவித்தார்.

இந்த பொருட்கள் சீனா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது தொடர்பாக பினாங்கு, சிலாங்கூர், ஜொகூர் மற்றும் கெடாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 119 புலனாய்வு ஆவணங்கள் திறக்கப்பட்டு, 47 உள்ளூர் ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகம் ஆன்லைனில் அதிகரித்து வருகிறது. அவை வணிக வளாகங்களில் கூட வெளிப்படையாக விற்கப்படுகின்றன என்று அவர் மேற்கோள் காட்டினார்.

பாலியல்  பொம்மைகள் தவிர,  சுமார் RM600,000 மதிப்புள்ள உரிமம் இல்லாத அச்சிடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  Seri Kembangan மற்றும் Klang ஆகிய இடங்களில் உள்ள மூன்று அச்சக வளாகங்கள்  தற்காலிகமாக மூடப்பட்டன!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *