தலைநகரில் 13 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

ஜூன் 5,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர்களுக்கு எதிராகத் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று தலைநகர் JALAN IPOH, JALAN SULTAN ISMAIL பகுதியில் 13 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். பிற்பகல் 2.57 மணிக்குத் தொடங்கிய இச்சோதனையில் 24 முதல் 40 வயதுக்குற்பட்ட Bangladesh, Indonesia, India, Filipina ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளது.

சம்மந்தப்பட்ட 13 பேரும் தலைநகரில் உள்ள வணிகக் கடைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றி வருவதாகவும் எந்தவொரு பணியாளர் ஆவணங்களோ கடப்பிதழ்களோ கொண்டிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. தனியார் தங்கும் விடுதியை நடத்தி வந்த வெளிநாட்டினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1 மடிக்கணினி தங்கும் விடுதி ஒப்பந்த ரசீதுகள், 4 Bangladesh கடப்பிதழ்கள், 3 கைப்பேசிகள், என மொத்தம் RM74,000.00 ரிங்கிட், USD2,160 டாலர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டினர்களை மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைத்திருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Sebanyak 13 warga asing dari Bangladesh, Indonesia, India, dan Filipina ditahan dalam operasi Imigresen di Jalan Ipoh dan Jalan Sultan Ismail, Kuala Lumpur kerana tinggal tanpa dokumen sah dan bekerja sambilan. Pelbagai barangan turut dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *