15 பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தில் பலி! சிவநேசன் வருத்தம்!

- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
ஹஜ் பெருநாள் கொண்டாட்ட விடுமுறைக்குப் பின்னர் சொந்த ஊரிலிருந்து உப்சி பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிய மாணவர்கள் விபத்தில் பலியாகியிருப்பது பெரும் வேதனைக்குரியது என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் (Sumber Manusia, Kesihatan dan Hal Ehwal Masyarakat India negeri Perak) A. Sivanesan தெரிவித்தார். இது வரலாற்றில் ஏற்பட்ட மிகுந்த துயரமான விபத்து என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்தான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் GERIK நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினர். அண்மையில் தெலுக் இந்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியானதையும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் நினைவூட்டினார். எதிர்வரும் புதன்கிழமை பேராக் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த விபத்துக் குறித்து விவாதிக்கப்படும் என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் உறுதியளித்தார்.
Seramai 15 pelajar Universiti Pendidikan Sultan Idris (UPSI) maut dalam nahas bas di Lebuh Raya Gerik awal pagi ini. Exco Sumber Manusia, Kesihatan dan Hal Ehwal Masyarakat India negeri Perak, A. Sivanesan menyifatkan insiden ini sebagai tragedi menyayat hati dan menjanjikan siasatan rapi akan dijalankan segera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *