செக்ஷன் 420இன் கீழ் புவனேஸ்வரிக்கு எதிராக 28 குற்றச்சாட்டுகள்

- Muthu Kumar
- 10 May, 2025
பட்டர்வொர்த், மே 10-
விற்பனை செய்வதற்கான பொருள்களின் கையிருப்பை உட்படுத்திய கமிஷன் கட்டணம் தொடர்பில், தம் மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை, தனியார் நிறுவனத்தின் முன்னாள் மூத்த கொள்முதல் நிர்வாகி ஒருவர் நேற்று பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.
டேப் தயாரிப்புகளின் விநியோகம் தொடர்பில், ஒரு நிறுவனத்தை ஏமாற்றி,தமது நான்கு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 73,000 ரிங்கிட்டை பரிவர்த்தனை செய்ய வைத்ததாக, ஏ.புவனேஸ்வரி மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து ஜூன் 24ஆம் தேதிக்குள். பினாங்கு, பட்டர்வொர்த், ஜாலான் பாகான் ஜெர்மால், விஸ்தா பெர்னாமாவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 420இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு குற்றச்சாட் டிற்கும் தலா 1,000ரிங்கிட் ஜாமீன், தனிநபர்உத்தர வாதத்தின் பேரில் அவரை விடுவித்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவி மடுப்பை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Bekas eksekutif pembelian sebuah syarikat menafikan 28 tuduhan menipu berkaitan komisen barangan jualan, melibatkan transaksi RM173,000. Kes disiasat di bawah Seksyen 420 Kanun Keseksaan dan disebut semula pada 6 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *