402 குழந்தைகள் - அடி உதை - பாலியல் துன்புறுத்தல்கள்! GISBH நிறுவன தலைவரின் மகன் கைது!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, செப் 18: சிறுவர்கள் சித்ரவதை தொடர்பாக சர்ச்சையில் சிக்கியிருக்கும்  குளோபல் இக்வான் சர்வீசஸ் அன்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரின் மகனும், நேற்று நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசைன் தெரிவித்தார்.

நேற்று மாலை 6 மணியளவில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் GISBH லோகோ மற்றும் துபாய் உரிமத் தகடுகளைக் கொண்ட இரண்டு வாகனங்களை வடக்கு மண்டல எல்லைப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வாகனங்கள்  தாய்லாந்து நோக்கிச் செல்லும் புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தை நோக்கி சென்றதையும் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்தது.

இதனை அடுத்து அவ்வாகனங்களில் பயணித்த 28 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அதில் GISBH  நிறுவனத்தின் தலைவரின் மகனும் அடங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாகனங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, முதற்கட்ட விசாரணைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கான ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்து வருவதாக ரஸாருதீன் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மேலதிக நடவடிக்கைக்காக குபாங் பாசு போலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்படும், என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், GISBH உடன் தொடர்புடைய பாலியல் வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் இன்று சிரம்பான் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று ரஸாருடின் கூறியதாக பெர்னாமாவும் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவுகள் 14(a) மற்றும் 14(b) ஆகிய பிரிவுகளின் கீழ், உடல் ரீதியான பாலியல் வன்கொடுமைக்காக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிரிவு 14(a) குழந்தையின் உடலின் எந்தப் பகுதியையும் தொடுவது தொடர்பானது, அதே சமயம் பிரிவு 14(b) ஒரு நபரின் உடலின் எந்தப் பகுதியையும் குழந்தை தொடச் செய்வது தொடர்பானது.

முதல் சந்தேக நபர் பிரிவு 14(b) இன் கீழ் மற்றும் நான்கு பிரிவுகள் 14(a) இன் கீழ்ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இரண்டாவது சந்தேக நபர் மீது பிரிவு 14(ஏ) கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். மூன்றாவது சந்தேக நபர் மீது பிரிவு 14(ஏ) கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும் ரஸாருதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள GISBH உடன் தொடர்பு கொண்ட 20 நலன்புரி இல்லங்களை போலீசார் சோதனை செய்தனர்.

போலிஸாரின் கூற்றுப்படி, 402 குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகள் துன்புறுத்தல், பாலியல் சம்பவங்கள் என பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.

இதனை அடுத்து உஸ்டாஸ் மற்றும் விடுதி காப்பாளர் உட்பட 171 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில்  GISBH பின்னர் நலன்புரி இல்லங்கள் செயல்படுவதை மறுத்தது மற்றும் அதன் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் ஆண்குழந்தைகள் அல்லது மற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது என்ற கூற்றுக்களை நிராகரித்தது.

இருப்பினும், GISBH இன் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலி, கடந்த காலங்களில் அமைப்பினுள் ஓரினப் புணர்ச்சி தொடர்பான சம்பவங்கல்  நடந்ததாக ஒப்புக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *