பினாங்கில் சுகாதாரமற்ற 4 உணவகங்கள் மூடப்பட்டன!

- Muthu Kumar
- 12 May, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மே 12-
பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 உணவகங்கள், சுகாதாரமற்ற நிலையில், காணப்பட்டதால், நேற்று முன்தினம் அங்கு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், உண்மை நிரூபணமானதைத் தொடர்ந்து அவற்றின் வணிகத்திற்கு தடை விதிக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு பின்னர், இரு வாரங்களுக்கு அவை மூடி முத்திரை யிடப்பட்டன.
இந்த உணவகம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாநில மாநகர் மன்றத்தின் வணிக உரிமப் பிரிவினர். இங்கிருக்கும் உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அதிகாரிகள், உள்நாட்டு வருவாய் வாரியப் பொறுப்பாளர்கள், மலேசிய சுகாதார அமைச்சின் அலுவலர்கள் ஆகியோரின் துணையுடன் சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு விரைந்தனர்.
புகார் பெறப்பட்ட 4 உணவகங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறான சோதனைகளில், அங்கு சுகாதாரச் சீர்கேடுகள் உணவுகளின் கட்டணங்களை காட்சிப்படுத்தாதது, சமையல் அறை அசுத்தம் மற்றும் வருமான வரி செலுத்தாமை போன்ற பல்வேறான குறைகள் காணப்பட்டதால், அவற்றுக்கு எதிரான உரிய குற்றப் பதிவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவற்றை மூடி முத்திரையிடவும் உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தவிரவும் உணவகங்களின் நடத்துனர்களிடமும் உடனடி நடவடிக்கையாக அபராதத் தொகைகளும் விதிக்கப்பட்டு அவற்றை விரைந்து செலுத்திடவும் பணிக்கப்பட்டது. மாநகர் மன்றத்தின் 1991ஆம் ஆண்டின் சிறுவணிக விதிமுறைகளின் 38(1) ஆம் பிரிவின் கீழ் அந்த உணவகங்களில் எலிகளின் எச்சங்கள் காணப்பட்டும் அதற்கான தண்டனைக்கு வகை செய்யும் குற்றப் பதிவாணைகளும் வழங்கப்பட்டதோடு, அங்கு புகை பிடித்தவாறு அமர்ந்திருந்த நபர்களுக்கும் எதிராக, அபராத விதிப்பு அறிவிக்கையும் அளிக்கப்பட்டு, அதனை உடனுக்குடன் செலுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
Empat restoran di daerah barat daya Pulau Pinang ditutup selama dua minggu selepas didapati gagal mematuhi piawaian kebersihan, termasuk isu dapur kotor dan ketidakpatuhan terhadap undang-undang cukai. Tindakan dikenakan selepas aduan awam dan pemeriksaan kesihatan dilakukan. Pengusaha restoran dikenakan denda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *